நான் ஒசில் வர மாட்டேன்.. அவதூறு பரப்பியதாக மூதாட்டி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவுகளை செய்து வருகிறது. அந்த வகையில் மகளிருக்கு நகர அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்தகைய திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோவையில் மதுக்கரை அடுத்த பாலக்கரை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் மூதாட்டி ஒருவர் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

இதற்கு பதிலாக காசு கொடுக்கிறேன் சீட்டு கொடு என வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. அதன் பின்னர் மூதாட்டி ரூ.15 மதிப்புள்ள டிக்கெட்டை காசு வாங்கிக்கொண்டு நடத்துநர் டிக்கெட் கொடுத்துள்ளார்.

இந்த சூழலில் போலீசார் இது குறித்து விராசணை நடத்தினர். அப்போது அதிமுக பிரமுகர் பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது அரசுப் பேருந்தில் தகராறு செய்து அவதூறு பரப்பியதாக மூதாட்டி மற்றும் அதிமுகவினர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.