ரெண்டு நாள் ஊசிப் போன பிரியாணி விற்பனை.. அதிரடி சோதனையிட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்!
விழுப்புரத்தில் யா.முஹைய்யதீன் பிரியாணி இரண்டு நாட்களுக்கு முந்தைய பழைய பிரியாணியை விற்றது குறித்த புகாரினையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரசி சோதனையில் ஈடுபட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
விழுப்புரத்தில் உள்ள பிரபலமான பிரியாணிக் கடைதான் யா.முஹைய்யதீன் பிரியாணி கடை. இந்தப் பிரியாணிக் கடையானது விழுப்புரம் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ளது.
இந்த பிரியாணி ஹோட்டலில் தினசரியும் பிரியாணிப் பிரியர்களின் கூட்டம் அலைமோதும். ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இயங்கும் இந்த ஹோட்டலில் நேற்று வாடிக்கையாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முந்தைய பழைய பிரியாணியைக் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து வாடிக்கையாளர் சிலர் ஹோட்டலில் வேலைபார்ப்போரிடம் இதுகுறித்துக் கூற, இரு தரப்பிற்கும் இடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி வைரலானதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று திடீரென யா.முஹைய்யதீன் பிரியாணி கடைக்குள் புகுந்து விசிட் அடித்துள்ளனர்.
உள்ளே புகுந்த அதிகாரிகள் பிரியாணியின் தரத்தை சோதித்துப் பார்த்துள்ளனர்.
யா.முஹைய்யதீன் பிரியாணி கடையில் மட்டுமல்லாது அந்தப் பகுதியில் உள்ள பல அசைவ ஹோட்டல்களிலும் சோதனையினை நடத்தியுள்ளனர் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
சோதனையில் குளிரூட்டப்பட்ட சிக்கன் 5 கிலோவைக் கண்டுபிடித்ததுடன் உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
