ஷூட்டிங்கில் தகாத வார்த்தைகளால் திட்டிய பிரபல நடிகர்.. பல ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் செஞ்ச விஷயம்..

சினிமாவில் இரு நடிகர்களுக்கிடையே மோதல் இருப்பது என்பது மிக சாதாரணமான விஷயம் தான். இன்று பிரபலமாகி இருக்கும் பலரும் கூட நிச்சயம் தங்கள் நடிகராக முன்னுக்கு வர முயன்ற சமயத்தில் நிச்சயம் ஏராளமான தடங்கல்களை கடந்து தான் வந்திருப்பார்கள். அந்த வகையில், மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பத்தில் முன்னணி நடிகராக ஆவதற்கு முன்பாக சந்தித்த அவமானத்தை பற்றியும், அந்த அவமானத்திற்கு காரணமாக இருந்த நடிகருக்கு செய்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றியும் தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பதற்கு முன்பாக பலரும் நிறைய கஷ்டங்களை சந்தித்து தான் முன்னேறி இருப்பார்கள். தற்போது முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் கூட சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தான் இன்று உயர்ந்த இடத்திலும் உள்ளனர்.

இப்படி ஒரு காலத்தில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என கிளம்பியவர் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருந்த எம்ஜிஆர், தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.

மேலும் சினிமாவில் பெற்ற பெயருடன் தமிழக முதல் அமைச்சராகி நல்லாட்சி செய்ததுடன் இன்று வரையிலும் தமிழ்நாடு கண்ட சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறார். அப்படி இருக்கையில், இவர் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபத்திரங்களில் நடித்து வந்த போது சந்தித்த அவமானத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

சினிமாவில் சாதிக்க துடித்த சமயத்தில் நாடகங்களிலும் ஒரு பக்கம் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்போது அவருடன் பசுபதி என்ற நடிகரும் நடித்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அதிக கோபக்காரரான இவர், யார் என்னவென்று பார்க்காமல் தகாத வார்த்தையை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்படி ஒரு முறை பசுபதிக்கும், எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது எம்ஜிஆரையும் சரமாரியாக பசுபதி திட்ட, பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னர் இருவரும் நண்பராக இல்லாமல் இருக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு எம்ஜிஆரும் பெரிய நடிகராக மாறி உள்ளார். அப்போது அவரை பார்த்து தனது திருமண பத்திரிக்கையை கொடுக்க பசுபதி வந்துள்ளார்.

அதனை எம்ஜிஆர் வாங்கிக் கொள்ள, பசுபதியின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிந்து வர சொல்லி உள்ளார். அப்போது அவர் வறுமையில் வாடுவதாக தெரிய வர, கல்யாணத்துக்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார் எம்ஜிஆர். அது மட்டுமில்லாமல், நேரில் கலந்து கொண்டு மணமக்களையும் வாழ்த்தி உள்ளார் எம்ஜிஆர். ஒரு காலத்தில் சண்டை போட்டு பிரிந்த நண்பனுக்காக எம்ஜிஆர் செய்த உதவி, பலரையும் மனம் உருக வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...