கனமழை எதிரொலி: ஒகேனக்கல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு!!!

தமிழகத்தின் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

குறிப்பாக ஒகேனக்கல்லில் ஒரு ஆயிரம் கன அடியில் இருந்து 2 லட்சம் கன அடியாக நீர்வரத்தானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆறு மற்றும் சின்னாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தீபாவளி பண்டிகை! சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி..!!

இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே போல் ஒகேனக்கல் ஆற்றின் அருகே உள்ள ஐந்து அருவி, சினி பால்ஸ், மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஷவாயு கசிவில் உயிரிழப்பு: சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!!

மேலும், விடுமுறை நாட்களில் இத்தகைய அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment