பொங்கி வழியும் ஒகேனக்கல் அருவி… 4-வது நாளாக குளிக்க தடை!!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்துள்ளது. அதன் படி, வினாடிக்கு 1.15 கன அடி தண்ணீர் வந்துகொண்டு உள்ளது.

தற்போது இன்று காலை நிலவரப்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி என ஒகேனக்கலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீர் வரத்து குறைந்த போதிலும் காவேரி ஆறு கடல்போல் காட்சியளிக்கிறது.  குறிப்பாக மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி போன்ற அணைகள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நீர்வரத்து குறைந்த போதிலும், ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.