
தமிழகம்
கூட்டுத் தலைமை என்றால் ஓகே..!! இது பொதுக்குழு அல்ல; ஓரங்க நாடகம்.!!
தற்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பாதியிலேயே வெளியே வந்தனர்.
அதன் பின்பு தீவிர ஆலோசனை நடத்தி பின் செய்தியாளரை சந்தித்து வைத்திலிங்கம் பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது பேசிய அவர் அவைத் தலைவரை தேர்வு செய்தது செல்லாது என்று கூறினார்.
ஒரு அவைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் இருவரும் சேர்ந்து தான் அறிவிக்க வேண்டும். ஆனால் இன்றோ இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி மட்டுமே அவைத் தலைவரை அறிவித்தார்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் பொதுக்குழுவில் பதவி வெறி தலைக்கேறி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இது பொதுக்குழு அல்ல ஓரங்க நாடகம் என்றும் விமர்சித்துள்ளார். பதவி வெறியில் நடந்த பொதுக்குழு அல்ல; அரை மணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம் என்று கூறினார். கூட்டுத் தலைமைக்கு ஒப்புக்கொண்டால் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் கூறியுள்ளார்
