தக்காளி லாரி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அசட்டை பண்ணின அதிகாரிகள்! அதிருப்தியில் நீதிபதிகள்!!

சமீபகாலமாக தமிழகத்தில் தக்காளியின் விலை மிகுந்த உச்சத்தில் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் தக்காளியின் விலை அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த விலையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தக்காளி

அதோடு அதிக விலைக்கு தக்காளி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் அளவில் நிறுத்த இடம் அளிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்

இந்த உத்தரவை அதிகாரிகள் அசட்டையாக எடுத்ததாக காணப்படுகிறது. இதனால் உயர்நீதிமன்றம் தக்காளி குறித்து அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வில்லை என உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 4 வாரத்திற்கு தக்காளிகளை நிறுத்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க நேற்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment