நிர்பந்தமா? தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த அதிகாரி சஸ்பெண்ட!
இப்பொழுது 19ஆம் தேதி தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் பரபரப்பும் சலசலப்பும் நிகழ்ந்தது.
இந்த நிலையில் தேர்தல் முடிவின் காரணமாக தற்போது தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இவ்வாறு தகவல் அளித்தது. டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தலில் சரியான முடிவை அறிவித்து விட்டதாக மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நிர்பந்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததாக தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். நிர்பந்தம் கொடுத்தது யார்? பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளர் பழனி செல்வி தாக்கல் செய்த வழக்கு 10 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
