ஆஸ்கார் விழாவில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ அழைப்பு!! விருது வாங்குவாரா சூர்யா?

நம் தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகன் ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் ஹிட் அடித்துக் கொண்டு காணப்பட்டுள்ளது.

suriyaa pic

அதுவும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியாகாததுதான் ஒரு குறையாக காணப்பட்டது. ஏனென்றால் இவை இரண்டும் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

suriya vikram movie lokesh 1

இந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதி சூர்யா ‘விக்ரம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த 20 நிமிடங்கள் தான் படத்தை சுறுசுறுப்பாகவும் சுவாரசியமாகவும் மாற்றியதாக விமர்சனங்கள் வந்தன.

இந்த நிலையில் தற்போது நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ளும் அதிகாரபூர்வ அழைப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கார் விருது அளிக்கும் விழாவில் நடிகர் சூர்யாவின் பெயர் பரிந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் நடிகர் சூர்யா ஜெய்பீம் மற்றும் சூரரைப்போற்று ஆகிய இரண்டு திரைப்படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் தத்துரூபமாக நடித்துள்ளதால் அந்த இரண்டு படங்களின் பெயரை குறிப்பிட்டு ஆஸ்கார் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.