சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே
கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்
சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் 40வது படமான இந்த படத்தில் நாயகி பிரியங்கா மோகன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரியங்கா மோகனுக்கு சூர்யாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியங்கா மோகன் அடுத்தடுத்து இரண்டு இரண்டு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
.@priyankaamohan will play the female lead in #Suriya40BySunPictures@Suriya_offl @pandiraj_dir @immancomposer #Suriya40 pic.twitter.com/KYyIrdhCrH
— Sun Pictures (@sunpictures) January 28, 2021