Connect with us

சைவ சாப்பாட்டில் இறைச்சி-ஹோட்டலுக்கு பூட்டு!! அதிகாரிகள் அதிரடி!!

seal shop

தமிழகம்

சைவ சாப்பாட்டில் இறைச்சி-ஹோட்டலுக்கு பூட்டு!! அதிகாரிகள் அதிரடி!!

நம் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் சோதனை அதிதிவீரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஹோட்டல்களில் அவர்கள் சென்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை கைப்பற்றி கடைகளுக்கு சீல்களை வைக்கின்றனர்.

மேலும் கலப்படமான உணவு பொருட்களை கண்டறிந்து கடைகளின் உரிமையை ரத்து செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஒரு ஹோட்டலின் உணவக சான்றிதழை ரத்து செய்துள்ளனர்.

காரணம் என்னவென்றால் ஹோட்டலில் சைவ உணவில் இறைச்சியிருந்தது தான். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் புகார் குள்ளான சைவ உணவகத்தின் சான்றிதழை ரத்து செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பார்சல் வாங்கி சென்ற உணவில் இறைச்சி இருந்ததாக புகார் வந்ததன் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வை தொடர்ந்து உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள் உணவகத்தையும் பூட்டி போட்டு விட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top