Connect with us

திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை; கோடிகளை கொடுத்த சென்னை பக்தை!

tirupathi

செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை; கோடிகளை கொடுத்த சென்னை பக்தை!

திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை; கோடிகளை கொடுத்த சென்னை பக்தை!

இந்தியாவிலேயே அதிக பக்தர்களை கொண்ட கோவிலாக காணப்படுவது திருப்பதி. திருப்பதி ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் அமைந்திருந்தாலும் தமிழகத்திற்கு திருப்பதி அருகே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியில் இலவச டிக்கெட் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் சென்னை பக்தை ஒருவர் சுமார் 9 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த பக்தை ஒருவர் ரூபாய் ஒன்பது கோடி சொத்துக்களை காணிக்கையாக செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள இரண்டு வீடு உட்பட ரூபாய் 9.2 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி உள்ளார் அந்த பக்தை.

சென்னை மயிலாப்பூரில் இருந்த டாக்டர் ஆர்.பர்வதம் மறைந்த நிலையில் அவரது சொத்துக்கள் அனைத்தும் காணிக்கையாக செலுத்தப்பட்டன. டாக்டர் பர்வதத்தின் சொத்துக்களை அவரது சகோதரி ரேவதி விசுவநாத், திருப்பதி கோயிலுக்கு தானமாக வழங்கினார்.

வங்கியில் உள்ள ரூபாய் 3.2 கோடி ரொக்கம் மற்றும் ரூ 6 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகள் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top