ஒடிசாவில் வினோதம்! போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்ட சேவல்கள்..!!

ஒடிசாவில் புத்தாண்டை முன்னிட்டு, தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதாக 4 சேவல்கள் காவலில் வைத்த சம்பவம் இணையவாசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் அதிகளவில் சேவல் சண்டை விளையாட்டுகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் கங்காலா ஊராட்சிக்குட்பட்ட பெடபேடா கிராமத்தில் சேவல் சண்டை விளையாட்டுகள் அதிகமாக நடைப்பெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த வகையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் கங்காதர் மட்காமி (37), பிரஜாகிஷோர் பிசோய் (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல் 4 சேவல்கள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்கப்பட்ட நிலையில், சேவல்களை விடுவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு மாறாக 4 சேவல்களையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தனர்.

அதே போல் சேவல்களை பராமரிப்பதற்காக காவல்துறையினர் ரூ.5 ஆயிரம் வரையில் செலவு செய்ததாக கூறப்படுவது நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.