சுகாதார அமைச்சர் மீது திடீர் துப்பாக்கி சூடு: கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதி

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அமைச்சர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா தாஸ். இவர் ஒடிசாவில் உள்ள பிரஜாஜ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் திடீரென அமைச்சரை துப்பாக்கியில் சுட்டார். இதனால் குண்டு அவரது நெஞ்சில் காய்ந்து படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமைச்சர் நபா தாஸ் உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் விமானத்தின் மூலம் புவனேஸ்வர் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின் படி அமைச்சர் நபாதாஸ் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சருக்கு பாதுகாப்பாக இருந்த காவல்துறை உயர் அதிகாரி கோபால்தாஸ் என்பவர் தான் அமைச்சர துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் உடனே தெரியவில்லை என்றாலும் கோபால்தாஸை தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மீது காவல்துறையினரே துப்பாக்கி சூடு நடத்தி உள்ள சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.