Connect with us

அக்டோபர் மாத ராசி பலன் 2018!

ராசிபலன்

அக்டோபர் மாத ராசி பலன் 2018!

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்களுக்கு, இந்த அக்டோபர் மாதம்  நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 3, 6-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். புதன் சுக்கிரனோடு இணைந்து இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் எளிதில் வெற்றி அடைவீர்கள். வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பொறுமையுடன், நிதானமாக செயல்பட வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கொடுக்கின்ற பொறுப்புகளை தட்டி கழிக்காமல் நேரத்திற்கு முடித்து விடுங்கள். சூரியன் பலமாக ஆறாம் இடத்தில் இருப்பதால் எதிரிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

வெளிநாடு சம்மந்தமாக நல்ல செய்தி வரக்கூடும். வெளிநாட்டிற்கு சென்று இருந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். குரு பகவான் உங்கள் ஏழாம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி எட்டாம் இடத்திற்கு வருவதால் இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். எட்டாம் வீட்டில் இருந்து கொண்டு உங்களது இரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் திருமண தடை விலகும். இதுவரை உங்களது மகளுக்கு அல்லது மகனுக்கு எந்த வித சுப காரியமும் நடைபெறவில்லையே என்று கவலைப்பட்டு கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும்.

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2, 7-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது நிதானமாக செயல்பட வேண்டும். முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது இல்லத்தில் இருப்பவர்களை பற்றி சொல்லி கொண்டு இருக்க வேண்டாம். இல்லத்தில் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்லுங்கள்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு  முன்னேற்றமான மாதமாக இருக்கும். இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்க இருக்கின்றது. ஆறாம் இடத்தில் இருந்து ஏழாம் இடமான விருச்சிகம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகின்றார். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் தெளிவான பாதையை நோக்கி செல்வீர்கள். இதுவரை அஷ்டமத்தில் இருக்கும் சனியால் எண்ணற்ற பொருள் இழப்புகள், பண கஷ்டம், மன  வேதனை அடைந்தீர்களே, இனி உங்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது.

தொழிலில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சூடு பிடிக்க தொடங்கும். பணியிடத்தில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி பேச்சுவார்த்தைகள் நல்ல விதமாக முடிவடையும். காரியத்தடை அகலும்.

உங்கள் ராசிக்கு 2, 5-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் அக்டோபர் 6-ம் தேதி ஆறாம் வீட்டில் சஞ்சரிக்க போகின்றார். புதன் ஆறாம் இடத்தில் மறைவதால் தனலாபம் உண்டாகும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும். தாய்வழி சொந்த பந்தங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் துலாம் ராசியில் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கின்ற பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுது ஒரு முறைக்கும் பல முறை சிந்தித்த பிறகே செயலில் ஈடுபடுங்கள்.

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம்  உங்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்ற மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் புதன் பகவான் கன்னி ராசியில் பலத்துடன் இருந்தாலும், சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகின்றார். நினைப்பது ஒன்று நடைபெறுவது வேறு  என்று நிலை உருவாகும். வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி புதன் பகவான் துலாம் ராசியில் வருகின்றார். புதனோடு சுக்கிரன் இணைந்து இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். செய்கின்ற தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும்.

சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரக்கூடும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு பூமியால் யோகம் உண்டாகும். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களது பிள்ளைகள் கல்வி மற்றும் வேலை சம்மந்தமாக நல்ல செய்தி வரக்கூடும். உற்றார், உறவினர்களின் விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பணவரவு தொடர்ந்து சீராக வந்து கொண்டே இருந்தாலும், செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும்.

இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத வகையில் மாற்றங்களை கொடுக்கும். இதுவரை ஐந்தாம் இடத்தில் இருந்த குரு பகவான் பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசிக்கு அதாவது உங்களது ஆறாம் இடத்திற்கு வருகின்றார். அலுவலகத்தில் விருப்பமில்லாத இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகும். எதிரிகள் தொல்லைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் போட்டிகள், பொறாமைகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம்தேவை.

உங்கள் ராசிக்கு 5,12-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் அக்டோபர் 11-ம் தேதி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது செலவுகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் தலைதூக்கும். உங்களுக்கு அனுபவம் இல்லாத தொழில் அல்லது வியாபாரத்தில் முதலீடு செய்ய வேண்டாம். குடும்பத்துடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

இங்கு கூறப்பட்டுள்ள ராசிபலன்கள் பொதுவான பலன்கள் ஆகும். அவரவர்களின் சுய ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் பலம் , பார்வை , சேர்க்கை வைத்து பலன்கள் மாறுபடக்கூடும்.

கடகம்:

கடகம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுகின்ற மாதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் புதன் சூரியனோடு இணைந்து கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். அக்டோபர் 6-ம் தேதி புதன் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றார். புதன் சுக்கிரனோடு இணைந்து துலாம் ராசியில் இருக்கும் பொழுது உங்களுக்கு எண்ணற்ற  நல்லவை நடைபெற போகின்றது. வியாபாரத்தில், தொழிலில் இருந்த தேக்க  நிலை மாறி சூடுபிடிக்க தொடங்கும்.

தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உங்கள் ராசிக்கு 4,11-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் துலாம் ராசியில் இருக்கும் பொழுது புதிய வாய்ப்புகள் வரக்கூடும். ஒரு சிலருக்கு வீடு கட்டுவதற்கான பணம் கைக்கு வரக்கூடும்.

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது எவ்வித பாதிப்புகளையும் கொடுக்கமாட்டார். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது பெரிதும் பாதிப்புகள் நேரிடாது என்றாலும் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். மனசோர்வு, தேவையில்லாத பயம் வந்து நீங்கும்.

இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு பல விதத்தில் மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் கொடுக்க போகின்றது. இதுவரை நான்காம் வீட்டில் இருந்த குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்கு பெயர்ச்சியாவதால் நினைத்த காரியம் கைக்கூடும். மனதில் தெளிவு பிறக்கும். தேவையற்ற அச்சம் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை கூடும்.

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம்  உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்க போகின்றது. உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான ரிஷபத்தை குரு பார்ப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும். இதுவரை சரியான வேலை அமையவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும்.

அவ்வப்பொழுது தூக்கமின்மை ஏற்படக்கூடும். கடினமாக உழைக்க வேண்டி வரக்கூடும். புதிய பொறுப்புகள் வரக்கூடும். உங்கள் ராசிக்கு 2,11-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசிக்கு வருகின்றார். துலாம் ராசியில் சுக்கிரனோடு இணைந்து புதன் இருப்பதால் நினைத்தபடி நல்லவை நடைபெறக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்து கொண்டு இருந்த பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் ஏற்ப்படக்கூடும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மேலோங்கும். பெற்றோர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். பிள்ளைகள் சம்மந்தமாக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பல நாட்களாக முடியாத சட்ட பிரச்சனை, சொத்து சம்மந்தமான பாக பிரிவினைகள் எல்லாம் நல்ல விதமாக முடிவடையும்.

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது காரியத்தடை ஏற்படக்கூடும். உங்கள் இல்லத்தில் இருக்கின்ற பிரச்சனைகளை மூன்றாம் நபர்களிடம் சொல்லி கொண்டு இருக்க வேண்டாம். மாத தொடக்கத்தில் சூரியன் இரண்டாம் இடத்தில் இருப்பதால் தாராளமான பணவரவு வரக்கூடும். ஆடை, அணிகலன்கள், விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். சுயதொழில், வியாபாரம் செய்கின்றவர்களுக்கு கணிசமான லாபம் வரக்கூடும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த அக்டோபர் மாதம் பொருளாதாரம் வளர்ச்சி ஏற்படுகின்ற மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிக்கும், பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதன் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கின்ற போகின்றார். உங்கள் ராசிநாதன் புதன் சுக்கிரனோடு இனணந்து  இரண்டாம் வீட்டில் இருப்பதால் தாராளமான பணவரவு வரக்கூடும். புதிய தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்குவதற்கான திட்டம் நிறைவேறும். வீட்டில் சுப விசேஷ பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக நடைபெறும்.

பணியிடத்தில் உங்களுக்கு வேலைச்சுமை இருந்தாலும், உங்கள் சாதுரியமான பேச்சால் அனைவரையும் வியக்க வைப்பீர்கள். குறிப்பாக மார்க்கெட்டிங், ஆசிரியர், பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு இது பொற்காலம் என்றே கூறலாம். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. சிலருக்கு சம்பளம் உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உங்களது திறமை பளிச்சிடும். மனதிற்கு பிடித்தமான நல்ல வரன் அமையக்கூடும்.

இதுவரை பல நாட்களாக நினைத்த காரியங்களை செயல்படுத்த முடியாமல் தள்ளி வைத்து கொண்டு இருந்தீர்களே, இனி அதை ஒவ்வொன்றாக செயல்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது. இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன்களை வழங்க போகின்றது. உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து மீண்டும் பாச  மழையில் நனைய போகின்றீர்கள் .

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது சற்று பொறுமையுடன் கையாளுங்கள். செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கும். பூமி சார்ந்த முதலீடுகளை தள்ளி வைப்பது நல்லது. வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனை படி நடந்து கொண்டால் பெரிதும் பாதிப்புகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களின் விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம்  உங்களது செல்வாக்கு உயரக்கூடிய மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சொந்த வீட்டில் இருப்பதால் உங்களுக்கு ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரக்கூடும். உங்களது திறமைகள் பளிச்சிடும். சூரியன் 12-ம் வீட்டில் இருப்பதால் தூக்கமின்மை, சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது சற்று அலைச்சல், சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். நினைக்கின்ற காரியங்களை முடிக்க இயலாமல் இழுபறியாக செல்ல நேரிடும்.  ராசிநாதன் சுக்கிரன் சொந்த வீட்டில் இருப்பதால் எவ்வித பாதிப்புகள் உண்டாகாது. இல்லத்தில் இருப்பவர்களின் ஆதரவு குறையலாம். கவனத்தை சிதற விடாமல் விடா முயற்சியுடன் செயலில் ஈடுபடுங்கள்.

உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு 9,12-ம் இடங்களின் அதிபதியான புதன் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கின்ற போகின்றார். புதன் சுக்கிரனோடு இணைந்து இருப்பதால் உங்களது செல்வாக்கு உயரக்கூடும். அலுவலகத்தில் உங்களது மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரம் செய்கின்றவர்களுக்கு அதிகம் லாபம் வரக்கூடும்.

இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு பல விதத்தில் நன்மையை தர போகின்றது. ஆறாம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் கடன், மருத்துவ செலவுகளில் இருந்து படிப்படியாக விடுபடுவீர்கள். மேலும் உங்களது பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் முத்தான தொழில் வாய்ப்புகள் வரக்கூடும். மொத்தத்தில் துலாம் ராசியினருக்கு புதிய பாதையில் பயணித்து முன்னேற்றம் அடைகின்ற மாதமாக இருக்கப் போகின்றது.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம்  தாராளமான பணவரவு வருகின்ற மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சமாக கேதுவுடன் இணைந்து மூன்றாம் இடத்தில் இருப்பதால் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இதுவரை இருந்து வந்த மன குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவை எடுப்பீர்கள். இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிக அளவில் நன்மையை தர போகின்றது. இருளில் இருந்த விருச்சிகம் ராசியினர் வெளிச்சத்திற்கு வர போகின்றீர்கள்.

உங்களது பிள்ளைகள் சரியாக உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்று இருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களது பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். இறுதி சுற்று ஏழரை சனி தொடர்வதால் வெளியிடத்தில் சொல்ல முடியாத அளவிற்கு துன்பங்களை சந்தித்து வந்தீர்களே, இனி குரு உங்களது ராசியில் இருப்பதால் எதையும் சமாளிக்கின்ற ஆற்றல் பிறக்கும்.  மன தைரியம், தன்னம்பிக்கை கூடும்.

உங்கள் ராசிக்கு 7,12-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றார். வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது வருமானம் இருமடங்காக உயரக்கூடும். விலகி சென்ற சொந்த பந்தங்கள் மீண்டும் இணைவார்கள்.

உங்கள் ராசிக்கு 8,11-ம் இடங்களின் அதிபதியான புதன் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கின்ற போகின்றார். புதன் 12-ம் இடத்தில் இருக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்து கொண்டு இருந்த இடமாற்றம், ஊர்மாற்றம் அமையக்கூடும். அலுவலத்தில் உங்களின் திறமையின் பரிசாக பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம், சொந்த தொழில் செய்கின்றவர்களுக்கு ஏற்றமான காலமாகும்.

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு அதிரடி மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படுகின்ற மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7,10-ம் இடங்களின் அதிபதியான புதன் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கின்ற போகின்றார். புதன் சுக்கிரனோடு இணைந்து இருப்பதால் பழைய பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு எடுப்பீர்கள். சொத்து சம்பந்தமாக இருந்து வந்த பாகப் பிரிவினை பிரச்சனை எல்லாம் நல்ல படியாக முடிவடையும். உடன் பிறந்தவர்களோடு இருந்து வந்த சுணக்கம் நீங்கி இணக்கம் உண்டாகும்.

உத்யோகத்தில் இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலை மாறும். புதிய வாகனம் வாங்குவது, வீடு கட்டும் யோகம் இருக்கின்றது. உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்காக எடுக்கின்ற முயற்சிகள் வீண்போகாது. மகளுக்கு அல்லது மகனுக்கு எவ்வித சுப விசேஷமும் நடைபெறவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும்.

குடும்பத்தில் நடைபெறும் விஷயங்களை பெரிது படுத்தாமல் அதனை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிற்காலத்தில் அதன் விளைவாக சண்டை, சச்சரவு ஏற்படக்கூடும். ஜென்மராசியில் சனி பகவான் இருப்பதால் சற்று அலைச்சல், தாமதம், சிறு சிறு பிரச்சனைகள் வர நேரிடும். எதிலும் நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட்டால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது.

உங்கள் ராசிக்கு 6,11-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொல்லைகள் அகலும். வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது வேலைப்பளு குறையும். உங்களது மாற்று யோசனையால் வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

மகரம்:

மகரம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம்  உங்களுக்கு லாபம் அதிகரிக்கின்ற மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 5,10-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நிரந்தமான வேலை அமையவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையக்கூடும். வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிள்ளைகளை உங்களது மேற்பார்வையில் வைத்து கொள்வது நல்லது.

இதுவரை குரு பகவான் பத்தாம் இடத்தில் இருந்து கொண்டு செய்கின்ற  வேலையில் சிறு சிறு சிரமங்களை கொடுத்து வந்தார். இனி அக்டோபர் மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் பதினோராம் இடத்திற்கு வர போகின்றார். குருவின் பார்வை  உங்களது 3-ம் இடத்தில்  பதிவதால் உடன் பிறப்புகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். உங்களது ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக்கூடும். புத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு மழலை செல்வம் கிட்டும்.

உங்கள் ராசிக்கு  6, 9-ம் இடங்களின் அதிபதியான புதன் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கின்ற போகின்றார். துலாம் ராசியில் புதன் சுக்கிரனோடு இணைந்து இருப்பதால் உங்களது தொழிலில் வளர்ச்சி மேலோங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி விறுவிறு என்று நடைபெறக்கூடும். உங்களது பிள்ளைகளால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறக்கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பொருள் இழப்பு, பணம் விரயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்த மாதம் அதனை ஈடுகட்ட வாய்ப்புகள் வரக்கூடும். எதிர்பாராத வகையில் இரட்டிப்பு லாபம் வரக்கூடும்.

கும்பம்:

கும்பம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம்  உங்களுக்கு தனவரவு அதிகரிக்கின்ற மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 5, 8-ம் இடங்களின் அதிபதியான புதன் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றார். புதன் சுக்கிரனோடு இணைந்து யோகமான பலன்களை கொடுக்க போகின்றது. தடைகள் அகலும். அலுவலகத்தில் உங்களது உழைப்புக்கு ஏற்றபடி சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். திடீர் தனலாபம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 4, 9-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றார். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் இருந்து வந்த கருத்து  மோதல்கள் மறையக்கூடும்.

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது சிறப்பான பலன்களை தராது. சொந்த வீட்டில் சுக்கிரன் வக்ர இயக்கத்தில் இருந்தாலும் சற்று எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொருள் இழப்பு நேரிடும் என்பதால் பயணத்தின் பொழுது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களது தொழிலில் அபார வளர்ச்சியை கொடுக்கப் போகின்றது. பொதுவாக 10ல் குரு வந்தால் தொழில் சிறப்பாக இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் உங்களது பதினோராம் மற்றும் இரண்டாம் வீட்டின் அதிபதியான குரு பத்தாம் வீட்டில் வருவதால் எதிர்பார்த்த வகையில் மாற்றங்களும் முன்னேற்றத்தையும் கொடுக்க போகின்றது. தனவரவு அதிகரிக்கும்.

உச்சம் பெற்ற செவ்வாய் கேதுவுடன் இணைந்து பன்னிரண்டாம் இடத்தில்  இருப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உங்களது ஆறாம் இடத்தில் ராகு, கேந்திரத்தில் குரு இருப்பதால் அஷ்டலக்ஷ்மி யோகம் உருவாகிறது. உங்களுக்கு பெயர், புகழ், பொருளாதாரம் வளர்ச்சி படிப்படியாக உயரப் போகின்றது.

மீனம்:

மீனம் ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதம்  உங்களுக்கு தடைகள் அகலும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 4, 7-ம் இடங்களின் அதிபதியான புதன் அக்டோபர் 6-ம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கின்ற போகின்றார். துலாம் ராசியில் இருக்கும் சுக்கிரன் புதனோடு இணைந்து இருப்பதால் உங்களுக்கு திருப்திகரமான தனவரவு உண்டாகும். இல்லத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு படிப்படியாக குறைய தொடங்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும்.

புதன் பகவான் 8-ம் இடத்தில் மறைந்து இருப்பதால் எதிர்பாராத வகையில் நல்லவை நடைபெறப் போகின்றது. பேச்சு திறன் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம், விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும். பணியிடத்தில் வேலைச்சுமை அதிகரிக்கக்கூடும். மேலதிகாரிகள் உங்களுக்கு கூடுதலாக பொறுப்புகளை கொடுப்பர். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டும் விதமாக நல்ல வருவாய் வரக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல் அகலும்.

உங்கள் ராசிக்கு 3, 8-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் அக்டோபர் 11-ம் தேதி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது நல்லவை நடைபெறக்கூடும். பல முறை முயற்சி செய்தும் தடைபட்ட விஷயங்கள் இப்பொழுது உங்களுக்கு சாதகமாக முடிவடையும். அவ்வப்பொழுது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை, சர்ச்சரவு ஏற்படக்கூடும். மற்றவர்களை பற்றி வீணாக கற்பனை செய்து புறம் பேசாதீர்கள். இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டு கொடுத்து சென்றால் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கலாம்.

இம்மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்க போகின்றது. திருமண தடை விலகி நல்ல வாழ்க்கை  துணை அமையக்கூடும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மழலை செல்வம் கிட்டும். சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ராசிபலன்

  • Kumbam Kumbam

    ராசிபலன்

    கும்பம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

    By

    குருபகவான் 2 ஆம் இடத்திலும், சனி பகவான் 4 ஆம் இடத்திலும் உள்ளனர். வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்போர் வீடு...

  • Untitled Untitled

    ராசிபலன்

    ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2022!

    By

    ஆகஸ்ட் மாதமானது சுபகிருது வருடம், ஆடி 16-ம் தேதி பிறக்கின்றது. ஆவணி மாதம் 15-ம் தேதி முடிகிறது. கடந்த மாதத்தினைப் பொறுத்தவரை...

  • மீனம் மீனம்

    ராசிபலன்

    மீனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

    By

    மீனம் இராசியினைப் பொறுத்தவரை குருவின் வக்கிரம் அடைந்தும், சனி பகவான் 11 ஆம் இடத்தில் இருப்பதால் பதற்றத்துடன் செயல்படுவீர்கள். தொழிலைப் பொறுத்தவரை...

  • கும்பம் கும்பம்

    ராசிபலன்

    கும்பம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

    By

    ஏழரை சனியில் இருக்கும் கும்பம் இராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் விரயச் செலவுகளை ஏற்படுத்தும் மாதமாகவே இருக்கும். புதிய தொழில் செய்யும் முயற்சியில்...

  • மகரம் மகரம்

    ராசிபலன்

    மகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

    By

    மகரம் ராசியினைப் பொறுத்தவரை புதன் பகவானின் பார்வை உச்சமடையும். சனி பகவான் மகரத்திலேயே இருக்கும். சுக்கிரனின் பார்வை மகரத்தின் மீது விழும்....

To Top