Connect with us

ஆபாச வீடியோ எடுத்ததாக புகார்… போலி இயக்குனருக்கு நீதிமன்ற காவல்!!

director

தமிழகம்

ஆபாச வீடியோ எடுத்ததாக புகார்… போலி இயக்குனருக்கு நீதிமன்ற காவல்!!

சேலத்தில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்ததாக கைது செய்யப்பட்ட போலி இயக்குனர் வேலு சத்திரியனுக்கு 6 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் வேல் சத்ரியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பொட்டச்சி என்ற பெயரில் புதிய திரைப்படம் எடுக்க நடிகைகளை தேர்வுசெய்ததாக கூறப்படுகிறது.

அப்போது சினிமா வாய்ப்பிற்காக பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி ரூ. 30 ஆயிரம் வாங்கியுள்ளார். அதோடு கவர்ச்சியாக நிற்க வைத்து போட்டோஸ் எடுப்பது மற்றும் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதன் பேரில் வேல் சத்ரியனை கைது செய்த போலீசார், அவரின் அலுவலகத்தை சோதனை நடத்தினர். அப்போது ஹார்ட் டிஸ்க்கள், ஆணுறை பாக்கெட்டுகள், லேப்டாப், கேமராக்கள் பறிமுதல் செய்தனர்.

அதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச ஆடியோக்களை கைப்பற்றினர். இந்த சூழலில் போலி இயக்குனர் வேலு சத்திரியனுக்கு 6 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top