Connect with us

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்… ஆபாச நடனங்கள் நடத்த தடை

ஆடல் பாடல் நிகழ்ச்சி e1663155600240

தமிழகம்

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்… ஆபாச நடனங்கள் நடத்த தடை

குலசேகரபட்டின முத்தாலம்மன் தசரா நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க உத்தரவிட கோரிய வழக்கு. தசரா நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த ம் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் , ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் ஆட தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.இது குறித்து உரிய வழிகாட்டுதலுடன் விரிவான உத்தரவு பிறப்பிக்க படும் எனவும் உத்தரவு. திருச்செந்தூர் சேர்ந்த ராம் குமார்  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு.

குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தசரா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் மைசூர் தசரா விழாற்கு அடுத்து குலசேகரன்பட்டினத்தில் தசரா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த தசரா விழாவில் பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சிலர் மும்பை பார் நடன மங்கையர், துணை சினிமா நடிகைகள், சின்னத் திரை நாடக நடிகர்களை அதிக பணம் கொடுத்து அழைத்து வந்து  பக்தர்களிடையே சினிமா குத்து பாடல்களுக்கு ஆடும் முறையை நடைமுறையிள் உள்ளது.

இந்த நடிகர் நடிகைகள் அரை குறை ஆடைகளுடன் ஆபாச உடையணிந்து ஆடுவது மாற்று மதத்தினர் மத்தியில் இந்துக்களின் விரத முறை மீதான நன்மதிப்பை குறைக்கிறது. 2017ல் மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஆபாசமான அங்க அசைவுகளுடன் அரை குறை ஆடைகளுடன் ஆடுவதை தடை செய்து இருந்தும் நீதிமன்ற உத்தரவு உரிய முறையில் நடைமுறைப் படுத்தவில்லை.

எனவே ஆன்மீக நிகழ்ச்சியான குலசை தசரா சார்ந்த நிகழ்ச்சிகளில் பக்திப் பாடல்கள் இல்லாத பாடல்கள் மற்றும் சினிமா குத்து பாடல்கள் பாடி மற்றும் ஒலிப்பரப்பி ஆட தடை விதிக்க வேண்டும் இதனை மீறும் ஒருங்கிணைப்பாளர்கள், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்கள் தசரா குழுக்கள் மற்றும் நடிகர் மற்றும் நடிகையர் மீது இந்த தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.. மனு தார்ர் தரப்பில் கோவில் நிகழ்ச்சியில் ஆண் பெண் இனைந்து ஆபாசமாக மேடையில்  போன்ற புகை படங்கள் நீதிபதியிடம் கொடுக்கபட்டது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி கோவில் திருவிழாவில் எப்படி இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்த காவல் துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கின்றனர் என கூறிய நீதிபதிகள்.

தசரா நிகழ்ச்சியில் இது போன்ற ஆடல் பாடல் நடத்த தடை விதித்தனர் மேலும் இந்த வருடம் நடைபெறும் தசரா நிகழ்ச்சி அனைத்தும் மாவட்ட ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் கோவில்களில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் ஆடால் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்த அனுமதிக்க முடியாது எனவே இது குறித்து உரிய வழிகாட்டுதல் விரிவான உத்தரவு பிறப்பிக்கபடும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top