ஓபிசி இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டுக்கும் முதலமைச்சருக்கும் பெரும் வெற்றி!-மூத்த வழக்கறிஞர் வில்சன்;

இன்று உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்புக்கான ஓபிசி 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்தது. இதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து வாதாடிய மூத்த வழக்கறிஞர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சருக்கும் பெரும் வெற்றியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அதன்படி மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பெற்றிருப்பது தமிழ்நாடு முதலமைச்சர் கிடைத்த வெற்றி என்று கூறினார். மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழக்கில் திமுக சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் வில்சன் இதனை கூறினார். உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த வழங்கிய பொறுப்பை தான் பணிவுடன் ஏற்றுக்கொண்டதாகவும் வில்சன் கருத்து கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பில் 4,000 இடங்களை இழந்து வந்த ஓபிசி பிரிவினருக்கு சமூக நீதி கிடைத்துள்ளது என்றும் கூறினார். நீட் மருத்துவ சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரும் வழக்கில் நீண்ட நேரம் வாதங்கள் நடந்தன என்றும் கூறினார். அரசியல் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையில் நீண்டநேரம் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றத்திற்கு வில்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொறுமையாக அனைத்து வாதங்களுக்கும் செவி கொடுத்தனர் என்றும் கூறினார். உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு பெற ரூ 8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிப்பது தவறு என்றும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. உயர்ஜாதி பிரிவினர் இட ஒதுக்கீடு வருமான உச்சவரம்பு பிரச்சனை பின்னர் விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தகவல் அளித்துள்ளது.

முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி வழக்கு தொடரப்பட்டது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது என்றும் வில்சன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment