உடல் எடையினைக் குறைக்கச் செய்யும் ஓட்ஸ் வடை!!

b2ea02f5993f6ee0a99fa6fe2f88e9be

உடல் எடையினைக் குறைக்கும் பொருட்களில் மிகவும் முக்கியமானது ஓட்ஸ், இந்த ஓட்ஸில் பொதுவாக அனைவரும் கஞ்சி காய்ச்சியே சாப்பிடுவர். அத்தகைய ஓட்ஸினைக் கொண்டு வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

ஓட்ஸ் – 1 கப்,

உளுத்தம்பருப்பு – 1/2 கப்,

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3

மிளகு,

சீரகம் – 1/4 டீஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1.         ஓட்ஸ் மற்றும் உளுந்தை தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து லேசாக தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

2.         அடுத்து வெங்காயம் பச்சைமிளகாய், மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி போன்றவற்றினை அரைத்த மாவுடன் கலந்து கொள்ளவும்.

3.         இந்த மாவினை உளுந்து வடைபோல் தட்டி, வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் ஓட்ஸ் வடை ரெடி.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print