நண்பர் ஓபிஎஸும் நானும் தேர்தலை விட்டு விலக இதுதான் காரணம்; டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்!

தேர்தல் ஆணைய சின்ன விவகாரம் காரணமாகவே ஓ.பன்னீர்செல்வமும், நானும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமெனில் அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும். ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று நான் கூறவில்லை, ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறுவதாக தெரிவித்தார்.

தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை அதிகமாக செலவு செய்கிறது. ஓ.பி.எஸ். எனது நண்பர் மற்றும் அவர் மீது தனிப்பிரியம் உண்டு. நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் தேர்தல் ஆணையம் மட்டுமே. எந்த அரசியல் காரணமும் இல்லை எனக்கூறினார்.

அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா? அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை என கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு 2 இலை சின்னம் கிடைத்ததாலும் வெற்றி இல்லை.2 இலைக்கான சக்தி இனி இல்லை. ஏனென்றால் அது தவறான நபர்களின் கையில் உள்ளது என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.