
தமிழகம்
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்? ஒற்றை தலைமையை தடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது போல் நிலவுகிறது. அதிமுகவில் இரு தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே தலைமை போட்டி நிலவுகிறது.
இதனால் இருவரும் இரு அணிகளாக பிரிந்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பன்னீர்செல்வம் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முழுவதும் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வம் புதிய வியூகம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
தலைமை விவகாரத்தில் பழனிசாமி உடன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தொண்டர்களை சந்திக்க பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். வரும் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதில் பழனிச்சாமி தரப்பு உறுதியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து நிலைமையை விளக்க திட்டமிட்டுள்ளார் என்றும் அரசியல் வட்டாரத்தில் தகவல் கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுகவில் தங்களுக்கு ஆதரவு திரட்ட பன்னீர்செல்வம் தரப்பில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பன்னீர்செல்வத்தின் சுற்றுப் பயண அட்டவணை இன்று இறுதி செய்யப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் பெரும் குழப்பம், மோதல்களுக்கு இடையே நடந்து முடிந்தது.
அதிமுக பொதுக்குழுவில் பழனிச்சாமி தரப்பினர் தன்னை அவமானப்படுத்தியது குறித்து தொண்டர்களிடம் முறையிட ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. டெல்லியில் 2 நாள் பயணத்தை முடித்து திரும்பியுள்ள பன்னீர்செல்வம் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஆயத்தம் ஆகிறார்.
சசிகலா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல உள்ள நிலையில் பன்னீர் செல்வமும் சுற்றுப் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
