Entertainment
அஞ்சலியின் பிறந்த நாளில் ‘ஒ’ போட்ட படக்குழுவினர்
பிரபல நடிகை அஞ்சலிக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்களும் சக நடிகர், நடிகைகளும் தங்களுடைய வாழ்த்துக்களை ஃபேஸ்புக், டுவிட்டர் மூலம் அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஞ்சலி நடித்து கொண்டிருக்கும் படம் ஒன்றின் டைட்டிலை படக்குழுவினர் சற்றுமுன் அவருக்கு பிறந்த நாள் பரிசாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் ‘ஒ’. இந்த ஒரே எழுத்தை டைட்டிலாக கொண்ட இந்த படம் ஒரு பக்கா த்ரில் படம் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
பிரவீன் பிக்காட் இயக்கும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘பிசாசு’, பசங்க 2′, ‘சவரக்கத்தி’, ‘துப்பறிவாளன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
