சத்துகள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் பொரியல்!!

875084f2f620618accacc14c9b460a88-2

மஞ்சள் பூசணிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இதனால் கண்பார்வைத் திறனை இது மேம்படுத்துவதாக உள்ளது. இப்போது நாம் மஞ்சள் பூசணிக்காயில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
மஞ்சள் பூசணிக்காய் – ½
வெங்காயம் – 1 
பச்சை மிளகாய் – 3 
தேங்காய் – கால் மூடி  
கடுகு – 1 ஸ்பூன் 
உளுந்து – 1 ஸ்பூன் 
பெருங்காயத் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு 
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 
1.மஞ்சள் பூசணிக்காய், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும். 
3. அடுத்து பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் பூசணியை சேர்த்து வதக்கவும்.
4. அதன்பின்னர் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து வேக விடவும். 
5. அடுத்து துருவிய தேங்காயை சேர்த்து இறக்கினால், சுவையான மஞ்சள் பூசணிக்காய் பொரியல் ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.