சத்தும் சுவையும் நிறைந்த நோன்பு கஞ்சி !! தயாரிப்பது எப்படி?

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு துவங்கி விட்ட நிலையில், அனைவரும் விரும்பிப் பருகும் நோன்புக் கஞ்சியைத் தயார் செய்வது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு.

ரமலான் நோன்பு என்ற உடனே அனைத்து மதத்தினருக்கும் முதலில் ஞாபகம் வருவது நோன்பு கஞ்சி தான். நோன்பு காலத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்  சூரியன் மறையும் மாலை பொழுது வரை உடலையும் மனதையும் கட்டுக்குள் வைத்து கடுமையாக நோன்பு இருப்பார்கள் இஸ்லாமியர்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்திற்கு நோன்புக்கஞ்சி வழங்கப்படும். பசியினை மட்டும் ஆற்றாது உடலுக்கு நன்மை பயக்கும்  அற்புதக் கஞ்சி தான் இது.

பயத்தம்பருப்பு  மற்றும் அரிசியை பாத்திரத்தில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதில் கேரட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பிரியாணி இலை மற்றும் மல்லி புதினாவை தூவி உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

தொடர்ந்து அடுப்பை சற்று குறைவாக வைத்து அனைத்தும் நன்கு வெந்தவுடன் நன்கு மசிக்க வேண்டும். பிறகு தனியாக பாத்திரம் எடுத்து எண்ணெய், நெய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தேங்காய் பாலையும் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிட்டு மசித்தவற்றை அதில் போட்டு நன்கு கொதிக்கவிட்டால் சுவையான நோன்பு கஞ்சி தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews