Connect with us

உச்சகட்ட பரபரப்பு!! சென்னையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

தற்கொலை

தமிழகம்

உச்சகட்ட பரபரப்பு!! சென்னையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

சென்னை திருவேற்காட்டில் இரண்டாம் ஆண்டு நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவேற்காடு அருகே தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விடுதி உடன் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த மாணவி சுமதி என்பவர் இரண்டாம் ஆண்டு பயின்று வந்ததாக கூறப்படுகிறது. இன்று மதியம் அவர் உணவு அருந்திவிட்டு  தனது அறைக்கு சென்ற மாணவி மீண்டும் வராததால் சந்தேகம் அடைந்த  மற்ற  மாணவிகள்   தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தனர்.

அப்போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் மற்றும் நர்சிங் கல்லூரி உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top