நர்சிங் கோர்ஸ் படிக்க வேண்டுமா? விண்ணப்பம் செய்ய வேண்டிய இணையதளங்கள் அறிவிப்பு!

இன்று முதல் நர்சிங் உள்பட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்ததோடு விண்ணப்பிக்க வேண்டிய இணையதளங்களையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில மாதங்களாக பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன்னர் மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான நர்சிங், ரேடியோகிராபி, டயாலிசிஸ் உள்ளிட்ட பிஎஸ்சி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் பி.பார்ம் படிப்புகளுக்கும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களை http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இரண்டு இணையதளங்களில் டவுன்லோடு செய்து கொண்டு அதன் பிறகு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment