Connect with us

2 ஷிப்டுகள் பணிசெய்ய மிரட்டப்படும் நர்ஸ்கள்: போராட்டம் வெடித்ததால் பரபரப்பு

News

2 ஷிப்டுகள் பணிசெய்ய மிரட்டப்படும் நர்ஸ்கள்: போராட்டம் வெடித்ததால் பரபரப்பு

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள் நர்சுகள் ஆகியோர் தன்னலம் கருதாமல் தினமும் பல மணி நேரம் பணி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. பலர் வீட்டுக்கு கூட செல்லாமல் மருத்துவமனையிலேயே பல நாட்கள் தங்கியிருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் நர்சுகள் வலுக்கட்டாயமாக இரண்டு ஷிப்டுகள் பணிபுரிய வேண்டும் என்று மிரட்டப்படுவதாகவும் அதுமட்டுமின்றி சம்பளமும் சரியாக தரவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது

563a1d3ff40526b7d6ca2ae8843d58e8

இதனையடுத்து நேற்று திடீரென நர்ஸ்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். தங்களுடைய மருத்துவமனையில் இரண்டு ஷிப்டுகள் பணிபுரிய வேண்டும் என்று ஹெச்.ஆர். மிரட்டியதாகவும் அப்படி பணிபுரியவில்லை என்றால் வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்று கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

பி.பி.ஈ கிட் அணிந்துகொண்டு இரண்டு ஷிப்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிவது என்பது சாத்தியமில்லாதது என்றும், அது தங்கள் உயிருக்கு ஆபத்தானது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் போராட்டம் செய்து வரும் நர்ஸ்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top