நர்சரி பள்ளிகள் திறப்பது எப்போது? தமிழக அரசின் அரசாணை!

வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரிப் பள்ளிகளும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது என்பதும் இதனை அடுத்து நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதியில் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

எனவே எதிர்வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் எல்கேஜி, யூகேஜி, ப்ரீ கேஜி ஆகிய வகுப்புகள் கொண்ட மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment