சூதாட்ட மோகத்தால் பள்ளி நிதியிலிருந்து 5 கோடியை ஆட்டையை போட்ட கன்னியாஸ்திரி!!!

அமெரிக்காவை சேர்ந்த கன்னியாஸ்திரி மேரி மார்கரெட் க்ரூப்பர் (80). இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் தொடக்கப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார்.

இவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால் பள்ளிக்கு வரும் நன்கொடை, கல்வி கட்டணம் ஆகியவற்றை தனது ரகசிய அக்கவுண்ட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இது போன்று சுமார் 60 ஆண்டுகளாக சுமார் 5.97 கோடி ரூபாயை சுருட்டி சூதாட்டம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியது அம்பலமானது.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திறகு சந்தேகம் ஏற்பட்டதால் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் கன்னியாஸ்திரியோ தனது ஊழியர்களிடம் ஆவணங்களை அழித்துவிடுமாறு கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து ஓராண்டு சிறை தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment