ட்விட்டரை வாங்கினார் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலன் மாஸ்க்.!!
தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரராக காணப்படுகிறார் எலன் மாஸ்க். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக ட்விட்டரை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு வந்தார். அதில் வெற்றியும் பெற்றுள்ளதாக தெரிகிறது.
அதன்படி சமூக வலைத்தளமான ட்விட்டரை ரூபாய் 3.30 லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கினார் நம்பர் ஒன் கோடீஸ்வரர் எலன் மாஸ்க் டிவிட்டர். ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீத பங்குகளை வைத்திருந்தார் டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவன அதிபரான எலன் மாஸ்க்.
கருத்துசுதந்திரத்திற்க்கான தளமாக ட்விட்டரில் இல்லை என கூறி வந்த நிலையில் விலைக்கு வாங்கியுள்ளார். ஒவ்வொரு பங்கிற்கும் தலா 4 ஆயிரத்து 154 ரூபாய் என விலை பேசி மொத்தமாக நிறுவனத்தை வாங்கியுள்ளார்.
அதோடு மட்டும் இல்லாமல் மேலும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார். ஜனநாயகத்தின் அடித்தளமே கருத்து சுதந்திரம் தான் மனிதகுலத்தின் எதிர்காலம் விவாதிக்கப்பட்டது ட்விட்டரில் தான் என்றும் கூறினார்.
அனைவரையும் அனுமதிக்க, தேவையற்ற செய்திகளை பரப்பும் பாட்க்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். என்னைப் பற்றி மிக மோசமாக விமர்சிப்பவர்கள் ட்விட்டரில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
