உக்ரைனில் இருந்து வந்த இந்தியர்களின் எண்ணிக்கை? மாநிலங்களவையில் காரசார பேச்சு!
ரஷ்யா உக்ரேன் நாட்டின்மீது போர் புரிந்து கொண்டு வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வந்தது. அதுவும் குறிப்பாக அண்டை நாடுகளின் உதவியோடு விமானங்கள் அனுப்பி அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியா வந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். அதன்படி உக்ரைன் போர் தொடர்பான அறிக்கையை மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
அப்போது பேசிய அவர் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 24 விமானப்படை விமானங்கள் உள்பட 90 விமானங்கள் இயக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ கல்வி பயின்று வந்தனர் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியர்களை மீட்டு எல்லைப் பகுதிக்கு அழைத்து வர உக்ரைனில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன என்றும் ஜெய்சங்கர் கூறினார். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீது பெரும் சவாலாக இருந்தது என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்ன என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக உக்ரேனில் இருந்து வெளியேறிய இந்தியர்களை அண்டை நாடுகள் மிகுந்த மதிப்புடன் நடத்தும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் உடல் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார். பிரதமர் மோடியின் தலையீட்டால் தான் இந்திய மாணவர்களை சிக்கலான சமயத்தில் இருந்து எளிதாக மீட்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.
இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் சில தன்னார்வலர்கள் பங்கேற்றனர் என்றும் அவர் கூறினார்.
