கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தவரின் எண்ணிக்கை!

கொரோனா

தற்போது இந்தியாவில் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமியான கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைகாலமாக இந்த கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கம் சற்று உயர்ந்து காணப்படுகிறது.கொரோனா

அதன்படி இந்தியாவில் மேலும் 251 பேர் இந்த நோய்க்காக உயிரிழந்துள்ளனர். இவை கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்ததாக காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 437 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 1.58 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரத்து 560 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் ,குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 718 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

நேற்றைய தினம் மட்டும் 12 லட்சத்துக்கு அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினம் 12 லட்சத்து 77 ஆயிரத்து 542 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 106 கோடியே 31 லட்சத்து 24 ஆயிரத்து 205 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print