News
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் செய்தார்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதன் மத்தியில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என சில தினங்கள் முன்பு அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் தங்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இன்று காலையில் கடம்பூர் ராஜு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் டி டி வி தினகரன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசனும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் அத்தொகுதியில் தற்போது தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவரது கட்சியில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
