
தமிழகம்
தமிழக மக்களே!! இனி மஞ்சப்பைகளை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து அனைவரும் மஞ்சள் பை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டுமென அனைத்து அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்ற நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் நவீன காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் அமைந்துள்ளதாகவும் இதனை பார்க்கும் பொதுமக்களுக்கு கோபம் வர வேண்டும் என கூறினார். இதனிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து பசுமை பரப்பின் விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து விட்டு அனைத்து பொதுமக்களும் மஞ்சள் பையை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என கூறினார். பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து அனைத்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
