Connect with us

இனி ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை உடனடியாக திருப்பி அனுப்பி தரமுள்ள பொருட்களை வாங்கலாம்!!

ரேஷன் கடை

Tamil Nadu

இனி ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை உடனடியாக திருப்பி அனுப்பி தரமுள்ள பொருட்களை வாங்கலாம்!!

இனி ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை உடனடியாக திருப்பி அனுப்பி தரமுள்ள பொருட்களை வாங்கலாம்!!

இந்தியாவிலேயே விலை குறைவாக பொருள்கள் கிடைப்பது நியாய விலை கடைகளில் தான். தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விலையில்லா அரிசியை ரேஷன் கடைகளில் வழங்கிக் கொண்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே ரேஷன் கடை பொருட்கள் தரமற்றதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சில முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை திருப்பி அனுப்பலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.

நியாய விலை கடைகளில் தரமற்ற பொருட்களை உடனடியாக திருப்பி அனுப்பி தரமான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரமான அத்தியாவசிய பொருட்களை பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து தரம் குறைந்த பொருட்களை விநியோகிக்க படுவதாக புகார் எழுந்தது. புகாரை அடுத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் இவ்வாறு அறிவுரைகளை வழங்கினார்.

அறிவுரைகளை தவறும்பட்சத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பொது மேலாளர், மேலாளர், செயலாளர் பொறுப்பாக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். தரம் குறைந்த பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

தரமுள்ள பொருட்கள் மட்டுமே நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டு உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top