Connect with us

இனி சென்னையிலிருந்து தினமும் லண்டன் செல்லலாம்!!:பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு;

Chennai London common things 02

செய்திகள்

இனி சென்னையிலிருந்து தினமும் லண்டன் செல்லலாம்!!:பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு;

பல வெளிநாடுகளில் முக்கியமான பதவிகளில் நம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் காணப்படுகின்றனர். மேலும் பல நாடுகளில் தமிழர்களுக்கு மதிப்பும் அதிகளவிற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக லண்டன் பகுதியில் பல இடங்களில் தமிழக மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் லண்டன் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் லண்டன் சென்னை இடையே தினசரி விமானங்களை இயக்குவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து லண்டன் செல்லும்  பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கிய விமான சேவையை இனி தினசரி சேவையாக இயக்கப்படும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த பலனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top