கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரசியா அதி தீவிரமாக போர் புரிந்தது. அதிலும் குறிப்பாக உக்ரேனில் உள்ள பல துறைமுகங்களை ரசியா கைப்பற்றியது. பல அடுக்குமாடி கட்டிடங்களை வான்வழித் தாக்குதல் நொறுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தற்காலிகமாக போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக கூறியிருந்தார். ஏனென்றால் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள அண்டை நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கு உதவும் வண்ணமாக இவ்வாறு கூறியிருந்தார்.
இதனால் உக்ரைனில் உள்ள அண்டை நாடுகள் தங்களது நாடுகளுக்கு செல்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ரஷ்யா மீது உலகிலுள்ள பல நாடுகளும் பொருளாதார தடையை விதித்தது. சோனி பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படங்களை ரஷ்யாவில் திரையிட தடைவிதித்து உள்ளதாகவும் கூறி இருந்தது.
அதன் ஒரு கட்டமாக தற்போது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ரஷ்யாவுடன் உள்ள அனைத்து பண பரிவர்த்தனைகளை நிறுத்துவதாக கூறி உள்ளது. மேலும் உக்ரைன் போர் காரணமாக டிக்டாக் நிறுவனமும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கூடவே நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.