இனி ‘ஹலோ’-வுக்கு பதில் ‘வந்தே மாதரம்’; அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தொலைபேசி அழைப்பின்போது ’ஹலோ’ என்பதற்கு பதில் ‘வந்தே மாதரம்’ என கட்டாயம் கூற வேண்டும் என அரசு ஊழியர்களுக்கும், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி அரசு அலுவலகங்களில் சந்திக்கும் மக்களிடமும் ‘வந்தே மாதரம்’ எனக்கூறியே வணக்கம் செலுத்த வேண்டும் என்றும் அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாராஷ்டிரா அரசு மக்கள் “ஹலோ” என்பதற்குப் பதிலாக தொலைபேசி அழைப்புகளைப் பெறும்போது “வந்தே மாதரம்” என்று அழைக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் பங்கேற்றார். அவர் “வந்தே மாதரம் என்றால் நாம் நம் தாய் நாட்டிற்கு தலைவணங்குகிறோம் எனப்பொருள், எனவே, ஹலோ என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் என்று சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக அக்டோபர் 1ம் தேதி மகாராஷ்டிரா அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், இனி அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களது அதிகாரப்பூர்வ அல்லது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் போது “ஹலோ” என்பதற்குப் பதிலாக “வந்தே மாதரம்” என்று கூறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கட்டாயமில்லை என்றாலும், ஆனால் துறைகளின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கத்திய கலாச்சாரமான ‘ஹலோ’ என்ற வார்த்தைக்கு குறிப்பிட்ட அர்த்தம் எதுவும் இல்லை என்றும், “வந்தே மாதரம்” என்று கூறுவது நேசப்பற்று உணர்வை உருவாக்கும், அதை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என்று அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment