நவம்பர் 13ல் புதிய காற்றழுத்த தாழ்வு: ஒரு வாரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

வங்க கடலில் ஏற்கனவே தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. மேலும் நவம்பர் 10 ஆம் தேதியான இன்றும், நாளை நவம்பர் 11ம் தேதியும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நவம்பர் 13ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 13 முதல் 15 வரை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு சென்னையில் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகவும் இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை சென்னை மற்றும் காடலுர் இடையே கரையை நெருங்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட 25 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment