
News
பண்டிகை காலம் நெருங்கியது; 100 நாள் வேலைத் திட்டத்தில் நவம்பர் மாதம் சம்பளம் போடணும்!
பண்டிகை காலம் நெருங்கியது; 100 நாள் வேலைத் திட்டத்தில் நவம்பர் மாதம் சம்பளம் போடணும்!
தமிழகத்தில் தற்போது 100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளத் தொகை நிலுவையில் காணப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தார். அதில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு உத்தரவிட்டால் கிராமப்புற மக்கள் நகர்ப்புறம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து திமுக எம்பி டி ஆர் பாலு 100 நாள் வேலை திட்டம் பற்றி வலியுறுத்தியுள்ளார். அதன்படி நூறு நாள் வேலைத்திட்ட நிலுவைத் தொகை ரூபாய் 1178 கோடியை உடனே விடுவிக்க வலியுறுத்தி உள்ளார் திமுக எம்பி பாலு.
டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து திமுக எம்பி டி ஆர் பாலு வலியுறுத்தல் செய்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 1178 கோடி ஊதியம் தரப்படாமல் உள்ளது என்றும் திமுக எம்பி டி ஆர் பாலு கூறியுள்ளார்.
பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு ரூபாய் 1178 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
