நவம்பர் 20-ம் தேதி 6 மாவட்டங்களில்! வானிலை மையம் எச்சரிக்கை..!!

அந்தமான் கடல்பகுதிகளில் மேல்நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வங்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்பதால் தமிழகத்தில் வருகின்ற 20-ம் தேதி வரையில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் உள்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடம் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவ.20 தேதி திருவாரூர், நாகிஅ, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment