நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

வரும் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என திருவண்ணாமலை கலெக்டர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் உலக புகழ் பெற்ற கார்த்திகை தீபம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்டு களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு கார்த்திகை தீபத்தை நேரில் பார்க்க அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் இருப்பினும் வரும் 19ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்

தொலைக்காட்சிகள் நேரடியாக கார்த்திகை தீபம் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment