‘ஜூலை 18, நவம்பர் 1’ ஆகிய 2 நாட்களையும் தமிழ்நாடுநாள் கொண்டாடலாமே! எம்பி பாரிவேந்தர்;

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் தமிழ்நாடு நாள் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக ஜூலை 18-ஆம் தேதி இனி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.பாரிவேந்தர்

இதனைப் பல அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றனர்.இந்நிலையில் இது குறித்து பெரம்பலூர் மாவட்ட எம்.பி பாரிவேந்தன்  தங்களது கருத்தை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூலை 18 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு நாள் கொண்டாடலாம் என்று எம்.பி பாரிவேந்தர் கூறியுள்ளார்.

ஜூலை 18-ஆம் தமிழ்நாடு நாள், நவம்பர் 1ஆம் தேதி எல்லை போராட்ட தியாகிகளுக்கு நாள் என்பதை வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் முடிவுகளை பெரம்பலூர் மாவட்ட எம்பியாக நான் வரவேற்கிறேன் என்று பாரிவேந்தர் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் ஜூலை 18 மற்றும்  நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களையும் கொண்டாடலாமே என்று பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் கூறினார்.இவரின் கருத்து தமிழக மக்கள் மற்றும் விடுதலை போராட்ட தியாகிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment