இனி நவம்பர் 1 தமிழ்நாடு தினம் இல்லை: புதிய தேதியை அறிவித்த முதல்வர்!

கடந்த சில ஆண்டுகளாக நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினம் என கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இனி நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினம் இல்லை என கூறியுள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு தினம் கொண்டாடும் புதிய தினத்தையும் அறிவித்துள்ளார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை இதுவரை தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாடு என அறிஞர் அண்ணா அவர்களால் பெயர் வைக்கப்பட்ட ஜூலை 18ஆம் தேதி தான் இனி தமிழ்நாடு தினம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அரசாணை விரைவில் வெளிவரும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வரும் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment