இன்னும் 2 மணி நேரம் தான் இருக்கு; இந்த ஏரியா மக்கள் உஷாரா இருங்க!

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு புழல் ஏரியில் இருந்து நன்பகல் 12மணியளவில் 100கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளதை அடுத்து சென்னையில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்ட உள்ளன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரப்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று இரவு முதலே பெய்து வரும் கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நேற்று 26 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 140 கனஅடியாக அதிகரித்துள்ளது.

3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2386 மில்லியன் கனஅடியாக உள்ளது. எனவே புழல் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 100 கன அடி அளவிற்கு நீர் வெளியேற்றப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எனவே புழல் ஏரியின் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியிருத்தியுள்ளார்.

நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.