Connect with us

தஞ்சை பள்ளி மாணவி மரணம்-மாணவியின் தந்தை பதிலளிக்க நோட்டீஸ்!

உயிரிழப்பு

செய்திகள்

தஞ்சை பள்ளி மாணவி மரணம்-மாணவியின் தந்தை பதிலளிக்க நோட்டீஸ்!

தஞ்சை பள்ளி மாணவி மரணம்-மாணவியின் தந்தை பதிலளிக்க நோட்டீஸ்!

கடந்த மாதம் முழுவதும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தான். ஏனென்றால் தஞ்சை பள்ளி மாணவி மதமாற்ற கட்டாயத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டதாக வீடியோக்கள் வெளியானது.

ஆனால் விசாரித்ததில் மாணவி மதமாற்ற கட்டாயப்படுத்தப் படவில்லை என்று உண்மை அம்பலமானது. இந்நிலையில் இந்த மரணம் குறித்து மாணவியின் தந்தை பதிலளிக்க சென்னை உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன்படி தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் 4 வாரத்தில் தந்தை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட ஐகோர்ட் கிளை தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முதற்கட்டமாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்; பிற விவரங்களை அடுத்த கட்டமாக விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். பள்ளி மாணவி மரணம் விவகாரம் வேண்டும் என்றே ஆக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பு வாதம் புரிந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top