Connect with us

பிரதமர் பற்றி அவதூறு நிகழ்ச்சி ஒளிபரப்பு!- 1வாரத்துக்குள் விளக்கம் தரும்படி தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நோட்டீஸ்!!

modi 3

செய்திகள்

சமீபத்தில் பொங்கலை ஒட்டி அனைத்து தொலைக்காட்சிகளும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.

இதில் தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரதமரை பற்றி அவதூறு பரப்பும் வகையில் ரியாலிட்டி ஷோ ஒன்று வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரதமரின் உடையணிந்து அவரின் வெளிநாட்டு பயணம், பணமதிப்பிழப்பு உள்ளிட்டவைகள் குறித்து அந்த நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் முருகனின் பார்வைக்கு போனது அவரின் வலியுறுத்தலின் பேரில் தகவல் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் அந்த தொலைக்காட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கருத்து கூறி இருந்தார் அவர் குறிப்பிடுகையில் மத்திய அமைச்சர் முருகனின் பார்வைக்கு இது சென்றுள்ளது அவர் நடவடிக்கை எடுப்பார் என கூறி இருந்தார்.

அவர் கூறியபடியே அந்த தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top