News
“தேர்தல் வெற்றி செல்லாது!”:எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதனுக்கு நோட்டீஸ்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. மேலும் இதில் பல கட்சியினர் பல்வேறு கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தன. மேலும் தேர்தல் முடிவானது மே இரண்டாம் தேதி வெளியாகிறது. அதில் திமுக பெரும்பான்மை நிரூபித்து தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக முந்தைய ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக காணப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் பல எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நத்தம் தொகுதியில் போட்டியிட்ட விசுவநாதன் தற்போது வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் நத்தம் விஸ்வநாதனுக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி தேர்தல் வெற்றியை செல்லாது என கூறிய அறிவிக்க வழக்கில் அதிமுகவின் நத்தம் விஸ்வநாதனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தொடர்ந்த தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வேட்புமனுவில் தகவல்களை மறைத்தும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும் புகார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது நத்தம் தொகுதி எம்எல்ஏவான விஸ்வநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நத்தம் விசுவநாதன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மனுவில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
