தவறான சிகிச்சை! கால்பந்து வீராங்கனை மரணத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!

சென்னையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் மாணவி பிரியா ( வயது 17). கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில் கால்பந்து விளையாட்டின் பயிற்சியின் போது மாணவிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவியை அனுமதித்துள்ளனர்.

அலர்ட்! நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!!

அப்போது தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனால் மருத்துவரின் பரிந்துரைப்படி, கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருப்பினும் மாணவிக்கு வலிகுறையாமல் இருந்துள்ளதால் மறுபடியும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது காலில் உள்ள தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் காலை அகற்ற வேண்டும் என கூறிய நிலையில், அறுவை சிகிச்சை மூலம் மாணவிக்கு கால்கள் அகற்றப்பட்டது. இதற்கிடையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மாணவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment