ஆட்சியை பிடிக்க போவது யாரு? தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியும் அறிவிப்பு!

தலைமை தேர்தல் அதிகாரி சுசில் சந்திரா ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் குறித்தான தேதியை அறிவித்துள்ளார். அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேச  மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் கூறினார். பிப்ரவரி 14 ஆம் தேதியில் இரண்டாம் கட்ட தேர்தல், பிப்ரவரி 20ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும், பிப்ரவரி 23ம் தேதியில் நான்காம் கட்ட தேர்தல், பிப்ரவரி இருபத்தி ஏழாம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும், மார்ச் 3ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தல், மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுசில் சந்திரா கூறியுள்ளார்.

அதேவேளையில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். மணிப்பூரில்  இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார். பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய 2 தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா கூறினார்.

60 தொகுதி சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள பஞ்சாப், உத்தரகாண்ட் கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment